ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் விசாரணை ஆணையம் தொடர்பான வழக்கில்,தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ராம்குமார் தொடர்ந்த வழக்கில், மரணம் குறித்து புலன் விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு பதில்தர உத்தரவிட்டதோடு, வழக்கையும் 2 வாரம் ஒத்திவைத்தது.