முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக உறுப்பினர் ராம்குமார் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாநில அரசு பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை அடுத்த வாரத்துக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.