மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி – சடையீஸ்வரி தம்பதியில் 4 வயது மகளுக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். வீட்டில் இருந்த இருமல் மருந்தை கொடுத்துள்ளனர். இதில் சிறுமி மயக்கமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது சிறுமி இறந்தது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்தாக கூறப்படுகிறது.