தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பேசிய அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர். உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. அரசு விற்கும் சரக்கு அவர்களுக்கு SOFT DRINK போல மாறி விடுகின்றது. கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள். இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.