உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவைப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கம் விற்கும் சரக்குகளில் “கிக்” இல்லாததால் சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். அரசாங்கம் விற்கும் சரக்கு சிலருக்கு சாப்ட் ட்ரிங் போல மாறிவிடுகிறது எனக் கூறிய அவர், விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதைப் போன்று விழுந்து சிலர் செத்து விடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.