இந்தோனேசியாவில் 22 வயது இளம்பெண், ஜிம்மில் ஜன்னலோரம் இருந்த டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பின்னோக்கி நகர்ந்த அவர், திறந்திருந்த ஜன்னல் வழியாக 3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.