கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, சிபிஐ விசாரிக்க தடையில்லை என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சிவக்குமார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. 2013 முதல் 2018 வரை, முந்தைய காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தபோது, சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக, அவர் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிந்துள்ளது.