2024 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் பார்படாஸில் நாளை மோதவுள்ளது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா முழு தகுதியுடையவர் என பாக்., முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை தவறவிட்ட இந்தியா, நிச்சயமாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்றார். மேலும், ரோஹித் ஒரு தன்னலமற்ற வீரர், சுயநலத்தை விட அணிக்காக விளையாடுபவர் எனக் கூறியவர், கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா தோல்வியடைந்தது வருந்தத்தக்கது என்றார்.