2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்க அணியும் இன்றிரவு மோதவுள்ளன. இப்போட்டியில் வென்று கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20.42 கோடி பரிசு வழங்கப்படும். அதேபோல் 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.10.67 கோடி அளிக்கப்படும். அரையிறுதிப் போட்டிகளில் தோற்ற இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா 7 6.56 கோடி அளிக்கப்படவுள்ளது.