டி20 உலக கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. முந்தைய சூப்பர் 8 ஆட்டங்களில் இரு அணிகளும் முறையே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகளை வீழ்த்தி தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளது. 2 அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.