நடப்பாண்டு T20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடத்தப்படுகிறது. லீக் ஆட்டங்கள் அமெரிக்காவில் நடந்து முடிந்த நிலையில், சூப்பர் 8 ஆட்டங்கள் மே.இ.தீவுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சொந்த மண்ணில் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி, இறுதிப் போட்டிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் தோற்றதால், சூப்பர் 8 சுற்றுடன் உலக கோப்பை தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது.
2024 டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 135/8 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 136 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்க அணி துரத்தியபோது மழை குறுக்கிட்டது. இதனால், DLS விதிப்படி 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை தென்னாப்பிரிக்க அணி16.1 ஓவரில் 7 விக்கெட் இழந்த நிலையில் 124 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. குரூப் 2 பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது