பெங்களூருவில் டெங்கு காய்ச்சலுக்கு கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். ஆலப்புழா குட்டநாட்டைச் சேர்ந்த அல்ஃபிமோல் உயிரிழந்தார். இவர் கடந்த 11 நாட்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது. கேரளாவில் ஞாயிறன்று நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் டெங்கு, நிபா, பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் உள்ளது.