தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. எல்லையில் உள்ள மருத்துவ மனைகளில் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பிரத்யேக காய்ச்சல் வார்டில் கூடுதல் படுக்கை வசதியை உறுதி செய்யவும், தெரு மற்றும் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.