இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது டெபிட் கார்டு மூலமாக ஏடிஎம் சென்று பணம் எடுத்து விடுகின்றனர். பெரும்பாலானோர் டெபிட் கார்டு பயன்படுத்தி வரும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் ஒவ்வொரு வங்கியும் பல்வேறு விதமான காப்பீடுகளை வழங்குகின்றது.
டெபிட் கார்டின் வகைக்கு ஏற்ப 10 லட்சம் ரூபாய் வரை விமான பயண விபத்து காப்பீடு பெறலாம். அத்துடன் டெபிட் கார்டு மூலமாக வாங்கப்படும் பொருட்கள் சேதம் அடைந்தால் அல்லது தொலைந்து போனால் அதற்கும் காப்பீடு கிடைக்கும். அதில் பல விதிமுறைகளும் வரையறைகளும் உள்ளன. உங்கள் வங்கி என்ன தருகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.