சென்னையில் தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஆன்லைனில் பரிசு பொருட்களை அனுப்பி டார்ச்சர் செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். 22 வயதாகும் இந்த பெண்ணுக்கு இரண்டு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட உணவுகள், பரிசுகள் என்று கேஷ் ஆன் டெலிவரி மூலமாக ஆன்லைன் ஆர்டர் குவிந்துள்ளது.
மேலும் 77 முறை டாக்ஸிகள் அவரின் வீட்டிற்கு படையெடுத்துள்ளனர். இந்த வேலையை செய்வது யார் என்று தெரியாமல் குழம்பிய அந்தப் பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்ததையாடுத்து ஆன்லைன் ஆர்டரை ட்ராக் செய்து சிறுவனை கண்டுபிடித்துள்ளனர்.