டெல்லியில் இன்று 9வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ள நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார். மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியுள்ளதாக கூறி, நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் புறக்கணித்துள்ளன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.