டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலுங்கானாவை சேர்ந்த தான்யா சோனி (25), கேரளாவை சேர்ந்த நவீன் டால்வின் (28) ஆகியோர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் ஸ்ரேயா கடந்த ஏப்ரல் மாதமும், சோனி ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பயிற்சி மையத்தில் இணைந்துள்ளனர். நவீன் எட்டு மாதங்களாக டெல்லியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.