கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியிலும், டெல்லிக்கான நீரை ஹரியானா திறந்து விட மறுப்பதாக கூறி, டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து பரிசோதனை செய்த மருத்துவக் குழு, சாப்பிடவும், மருத்துவமனையில் அனுமதியாகவும் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், அந்த பரிந்துரையை அவர் மறுத்துள்ளார்.