டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம். மதுபான ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு நேற்று விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் இன்று காலை சிறையில் இருந்து வெளிவர இருந்த நிலையில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது அமலாக்கத்துறை. அதன் மீது விசாரணை நடைபெற இருப்பதால் ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டது