மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமாக
இருப்பதாக, அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு தூங்கும் போது அபாயகரமான அளவில் குறைவதாகவும், அவரது உடல் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாகவும் கூறினார். இந்த சூழலில், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.