சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் படைத்துள்ளார். இந்தாண்டில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் சதமடித்த அவர், தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் (122) சதமடித்து வரலாறு படைத்துள்ளார்.