சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற டேவிட் வார்னரை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு பரிசீலிக்க முடியாது என ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். டேவிட் வார்னர் அனைத்து வடிவ போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருந்தாலும், தற்போது அணி வெவ்வேறு வீரர்களுடன் செல்கிறது என்றார். முன்னதாக அணிக்கு தேவைப்பட்டால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட தயார் என வார்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.