சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ₹34க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் கிலோ ₹70-₹100 வரை விற்பனையானதால் நடுத்தர வர்க்கத்தினர் சிரமமடைந்தனர். இந்நிலையில், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் மொத்த விலையில் தக்காளி கிலோ ₹34, சில்லறை விலையில் ₹50க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.