தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ₹50 வரை விற்பனையாகி வருகிறது. பெரிய வெங்காயம் ₹35, உருளைக்கிழங்கு ₹44, கத்திரிக்காய் ₹65, பீன்ஸ் ₹65, கேரட் ₹90, முள்ளங்கி ₹30, வெண்டைக்காய் ₹35, பீட்ரூட் ₹30, வாழைக்காய் ₹10, பச்சை மிளகாய் ₹45, எலுமிச்சை ₹70க்கு விற்பனையாகி வருகிறது.
தக்காளி விலை ₹12 குறைந்திருந்தாலும் கேரட், உருளை, கத்திரி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாடகளாகவே தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.