பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார். கடும் போட்டிகள் நிறைந்த ஒலிம்பிக்ஸில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனக் கூறிய அவர், நாம் செய்யும் சிறிய தவறுகூட அனைத்தையும் மாற்றிவிடும் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தங்கப் பதக்கத்தை வெல்ல திறமை வாய்ந்த வீரர்களை எதிர்கொள்ள தனது 200% உழைப்பை கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.