தங்கம், வெள்ளி நகைகளுக்கு சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6% குறைக்கப்படுவதாகவும், பிளாட்டினம் நகைகளுக்கு சுங்க வரி 6.4% குறைக்கப்படுவதாகவும் பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி ஆகிய பெருட்களின் சுங்கவரி வரி குறைப்பால் ஒரு கிராமுக்கு ரூ.100 முதல் ரூ.125, ஒரு சவரனுக்கு ரூ.800 முதல் ரூ.1000 குறைய வாய்ப்புள்ளது என தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.