தங்க கடத்தலில் ஈடுபடுவோர் முன்பு போலீசாரிடம் பிடிபட்டால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வழக்கு சுங்கத்துறைக்கு மாற்றப்படும். ஆனால் BNS சட்டத்தில் அது திட்டமிட்ட குற்றமாக சேர்க்கப்பட்டு கூடுதல் தண்டனை அளிக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது. கடத்தல் நபருக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.