மத்தியபிரதேசத்தில் கனமழையால் தண்ணீரில் மூழ்கிய தண்டவாளத்தில், ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் ரயில் இயக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில், சில இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் ஊழியர்களின் உதவியுடன் ரயில் மெதுவாக இயக்கப்பட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.