மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், வேலூர் காட்பாடி ரூபாய் 11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டடத்தையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 31) தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.