மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய x பதிவில், “அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.