தமிழகத்தில் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 3949 மெட்ரிக் பள்ளிகளுக்கும் அரசு சார்பில் வருகின்ற ஆகஸ்டு நான்காம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2,199 தனியார் பள்ளிகளும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1750 தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அவ்வாறு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.