நடிகர் தனுஷின் 50ஆவது படமான “ராயன்” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், ஜூலை 16ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.