பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி எம்பியாக இருக்கிறார். அவர், தனது தொகுதி மக்களுக்கு நூதன நிபந்தனை ஒன்றை விதித்திருக்கிறார். அதாவது, தன்னை சந்திக்க வருவோர் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும், சந்திப்பதற்கான காரணத்தை காகிதத்தில் எழுதிவர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். வேறு தொகுதி மக்களை தவிர்ப்பதற்காக இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.