தமாகா மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் ஜி கே வாசன் நியமித்துள்ளார். அதன்படி துணை தலைவராக விடியல் சேகர், பொதுச் செயலாளராக யுவராஜா நியமிக்கப்பட்டுள்ளனர். அதனைப் போல மாநில பொருளாளர், அமைப்புச் செயலாளர், மாவட்ட தலைவர்களும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலில் தமாகா கடும் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.