தஞ்சை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரின் திருபுவனத்தில் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ சோதனை நடக்கிறது. இந்த வழக்கில் என்ஐஏ இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்தது. பிஎஃப்ஐ தலைவர்களின் தாவா பணியை எதிர்த்த ராமலிங்கம் 2019 பிப்ரவரியில் கொல்லப்பட்டார்.