மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 6 வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.