தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வலுவான தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் குறிப்பிட்டது. சென்னை நகர் பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.