மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூலை 29 வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும், நாளையும் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும். வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, ஜூலை 25 – 29 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.