கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து நான்கு பேர் என்ற ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், தமிழகம் முழுவதும் கள்ள சாராயம் ஆறாக ஓடுகிறது. இந்த கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கு அரசுக்கு திறன் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.