வீடுகளுக்கு குழாய் வழியில் இயற்கை எரிவாயு இணைப்பு பெற தமிழகம் முழுவதும் காஸ் சிலிண்டர் விநியோக நிறுவனங்களிடம் இதுவரை 30,000 பேர் பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழாய் வழி எரிவாயுவானது கேஸ் சிலிண்டருடன் ஒப்பிடும்போது 20% செலவு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் இது வாகனங்களுக்கு CNG எனப்படும் அழுத்தப்பட்ட எரிவாயுவாகவும், வீடுகளுக்கு PNG எனப்படும் குழாய் வழித்தடம் வாயிலாகவும் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.