தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பது சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருப்பதை காட்டுவதாக சசிகலா தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும், நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.