தமிழகத்தில் ஜூன் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கனமுதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யவும் எனவும் அறிவித்துள்ளது.