திமுக ஆட்சியில் தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பொது மயானத்தில் பட்டியலின மக்களை அடக்கம் செய்ய முடியாத நிலை நிலவுவதாக குற்றம் சாட்டிய அவர், ஆதி திராவிட மக்களை திமுக பாதுகாக்கிறது என்ற முதல்வர் கூறுவது அப்பட்டமான பொய் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதாளத்தில் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.