தமிழ்நாட்டில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர், ஆலம்பாடி, அழகர்கோவில், மேலவளவு உள்ளிட்ட இடங்களிலும், தி.மலை மாவட்டத்தில் பல பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும், நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் பல இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.