தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்ட ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியானது. ஆனால் புதிய ரேஷன் கார்டு விநியோகம் இன்னும் தொடங்கவில்லை என்று சேவை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரேஷன் கார்டு இல்லாததால் நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் பலர் தவித்து வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.