தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சகோதரர் விஜய் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, சமூகப் பொறுப்புடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்திருக்கும் சகோதரர் விஜய் அவர்களின் கலை மற்றும் அரசியல் பணிகள், இனிதே சிறப்புற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.