தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூலை 2 வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3°C அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37°C ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.