தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஜூன் 24ஆம் தேதி விசிக ஆர்ப்பாட்டம் நடத்தும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினரை கைது செய்ய வேண்டும் என்ற அவர் இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று அவர் சிகிச்சையில் உள்ளவர்களிடம் ஆறுதல் கூறினார்.