தமிழகத்தில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துகின்றனர். ஹிஜ்புத் தகர் என்ற தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.