தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தரைக்காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.